
உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்கள் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்
சுகாதாரத் துறையில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைகளை வலுப்படுத்துவது முக்கியமான விடயமாகும். இலவச சுகாதாரம் மனித வளமும் மனித உரிமையுமாக அமைந்து காணப்படுவதனால், உயர்தர, வினைதிறனான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கும் அரச நலன்புரித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக சுகாதாரத் துறை இயங்கி வருகின்றது. ஆகவே இந்த சுகாதார துறையை வலுப்படுத்தி, இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் துறையாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்ற International Healthcare Exhibition இன் இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உலக அமைதிக்காக பாடுபடுவதே நமது நாட்டின் கொள்கையாக அமைந்து காணப்பட வேண்டும். நம்பிக்கை சீர்குலைந்து காணப்படுவதன் காரணமாக இன்று போர்ச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் தேசிய அபிலாஷை, 220 இலட்சம் மக்களைப் பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை நிலைநிறுத்தி, சமநிலையான முறையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அர்ப்பணித்த நாடாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
???? இத்தருணத்தில், ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு ஏற்ப கொள்கையின் அடிப்படையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். நாட்டின், மக்களின் மற்றும் தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சர்வதேச மனித உரிமைக் கடமைகளை செயற்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
???? யார் என்ன கோரிக்கைகளை முன்வைத்தாலும் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
யார் என்ன கோரிக்கைகளை முன்வைத்தாலும், நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, சர்வதேச மனித உரிமைகள் சாசனம், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நன்கு புரிந்துகொண்டு நமது இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதகமான நிலைமைகளை தடுத்துக் கொண்டு மனித உரிமைகளைப் பாதுகாத்து இறையாண்மை, நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டை தொடர்ச்சியாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையான யதார்த்தம், அறிவு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது அரச கொள்கைகளை முன்னெடுக்கும் போது, காணப்படும் ஒவ்வொரு சவாலுக்கும் எம்மால் உரிய முறையில் பதிலளிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

