நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டை நடைமுறைப்படுத்திய பிறகும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்பதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன இயக்குநர் மயூர நெத்திகுமாரகே உறுதி செய்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், நாட்டில் அவசர எண்ணெய் தேவைகள் ஏற்பட்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அவை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

QR குறியீட்டு முறையின் கீழ் இன்று (15) காலை 6.00 மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர் மற்றும் அதே தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பு பயன்படுத்திய QR குறியீட்டை வைத்திருந்தவர்கள் அதையே தொடரலாம்.

QR குறியீடு இல்லாதோர், https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் இருந்து புதிய குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

வாகன உரிமை அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் ஏற்பட்டவோ, முன்பு QR குறியீடு இல்லாத வாகனங்களுக்கோ, இணையதளத்தின் வாகன பதிவு பிரிவில் பதிவு செய்தால் QR குறியீடு கிடைக்கும். இந்த பிரிவு சுமார் ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்கப்படும்.

மேலும் அவர் , “கடந்த 3-4 நாட்களில் பலர் எரிபொருள் சேகரித்து வரிசைகளை உருவாக்கியதைப் பார்த்தோம். இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும். அதனால் QR குறியீட்டை செயல்படுத்தினோம். .” என தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )