2026 ஆஸ்கார் ; ‘Avatar: Fire and Ash’ சிறந்த Visual Effects விருது வென்றது

2026 ஆஸ்கார் ; ‘Avatar: Fire and Ash’ சிறந்த Visual Effects விருது வென்றது

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கார் அகாடமி விருதுகளின் 98வது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 16ஆம் திகதி நடைபெறும் இந்த விழா உலகம் முழுவதும் திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire and Ash திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான Avatar திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று கிளாசிக் திரைப்படமாக திகழ்கிறது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான அதன் இரண்டாம் பாகமான Avatar: The Way of Waterவும் பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளியான Avatar: Fire and Ash திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )