எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று (18) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுகுறித்த முறைகேடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடமிருந்து பெறுவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் சட்டவிரோத செயல்பாடுகள், ஒழுங்குமுறை மீறல்கள் போன்றவற்றை பொதுமக்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

011 2106767
011 7296130

இந்த நடவடிக்கை, எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதோடு, பொதுமக்களுக்கு நியாயமான மற்றும் தடையற்ற சேவையை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )