போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (22) அதிகாலை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது, சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 36 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.190,000 பணமும், நவீன கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (22) மஹர நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )