இந்தியா–இலங்கை பாதுகாப்பு தொழில்துறை கருத்தரங்கில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

இந்தியா–இலங்கை பாதுகாப்பு தொழில்துறை கருத்தரங்கில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இன்று (மார்ச் 25) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா–இலங்கை பாதுகாப்பு தொழில்துறை கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை, இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா வரவேற்றார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் மூன்றாம் தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இக்கருத்தரங்கு “Identifying New Opportunities and Forging New Bonds” என்ற தலைப்பில் இம்முறை நடத்தப்படுகிறது.

இங்கு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா–இலங்கை இடையிலான நீடித்த கூட்டாண்மையை வலியுறுத்தினார்.

முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )