இன்று முதல் எரிபொருள் பௌசர் போக்குவரத்துமட்டுப்படுத்தப்படும்-பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று முதல் எரிபொருள் பௌசர் போக்குவரத்துமட்டுப்படுத்தப்படும்-பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று முதல் எரிபொருளை கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பௌசர்களை மட்டுமே இயக்க ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சுசாந்த ஜயவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வரையறுக்கப்பட்ட அளவிலான பௌசர்களை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தவும், ஏனையவற்றை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

2025 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போதைய நிர்வாகம் மாற்றியமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

: இந்தத் தீர்மானம்இன்று காலை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில் இத்தகைய போராட்ட நடவடிக்கையில் இறங்க நேரிட்டதாக ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )