மீன்பிடிப் படகுகள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்குQR குறியீடு மூலம் மேலதிக எரிபொருள்

மீன்பிடிப் படகுகள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்குQR குறியீடு மூலம் மேலதிக எரிபொருள்

மின்னியக்கிகள் , மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய
வாகனங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவினருக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை எதிர்வரும் வாரத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, இந்தப் பிரிவினருக்காகப் பிரத்யேகமான QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

பயனாளர்கள் தமக்குரிய QR குறியீட்டை எரிபொருள் நிலையங்களில் சமர்ப்பித்து, தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் பிரிவின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இலங்கையில் எரிபொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சீராக விநியோகிக்கவும் மீண்டும் QR முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )