
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களின் ஆட்சேபனைகளை கோரப்படுகின்றன
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று (மார்ச் 27) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியல் தொடர்பாக ஏதேனும் மேன்முறையீடுகள் (Appeals) அல்லது ஆட்சேபனைகள் (Objections) இருப்பின், அவற்றைச் சமர்ப்பிக்கப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணையதளத்திற்குச் சென்று நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
இணையதளத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அந்தந்தப் பிரதேச செயலகம்/கிராம உத்தியோகத்தரிடம் படிவத்தைப் பெற்றுக்கொண்டோ, அதனைப் பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பிரதேச செயலகத்திலுள்ள நலன்புரி நன்மைகள் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் இணையவழியாகச் சமர்ப்பிக்கலாம்.
பிரதேசத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு நிலையங்கள் ஊடாகவும் இணையவழியாக மேன்முறையீடு செய்யலாம்.

