
இந்தியாவின் உதவியாக 20,000 மெட்ரிக் தொன் டீசல் – 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் நாளை இலங்கை வருகை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பலனாக, நாளை (மார்ச் 28) இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்
இந்தியாவினால் வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் தொகுதி, இலங்கையின் தற்போதைய எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இக்கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கியுள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அவசர எரிபொருள் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு அங்கமாகவே இந்த எரிபொருள் தொகுதி வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

