வெப்பம் தொடரும் ; சில பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

வெப்பம் தொடரும் ; சில பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் பகுதிகளிலும், காலி மாவட்டம் மற்றும் மாத்தறை மாவட்டம் ஆகிய இடங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )