ஈரான் நடத்திய தாக்குதலால்                                   குவைத் எண்ணெய் கப்பல் சேதம்

ஈரான் நடத்திய தாக்குதலால் குவைத் எண்ணெய் கப்பல் சேதம்

துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் போக்குவரத்து கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கப்பலுக்கு ஓரளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததால், கப்பலுக்குள் தீ பரவியுள்ளது.

இருப்பினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )