
நேட்டோ அமைப்பிலிருந்து விலக முடிவு செய்த டிரம்ப்நேட்டோவை வெறும் ”காகிதப் புலி ” என விமர்சித்தார்
75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாகக் கருதப்படும் ‘நேட்டோ’
அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகத் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேட்டோ அமைப்பிடம் தொடர்ந்து விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காததே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
‘டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது டிரம்ப் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்வது குறித்து தான் “தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப் புலி” paper tiger என வர்ணித்துள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திடம் கடற்படை இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
“நான் ஒருபோதும் நேட்டோவினால் ஈர்க்கப்படவில்லை.
அவர்கள் ஒரு காகிதப் புலி என்பது எனக்கு எப்போதும் தெரியும், அது புட்டினுக்கும் தெரியும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

