முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

தெற்கில் வலுவான அரசியல் தலைவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை காலமானார்.

இவர் 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும், தனது அரசியல் வாழ்வில் பல அமைச்சர் பதவிகளையும் வகித்தார்.

தெற்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியாகப் பரவலாகக் கருதப்படும் விஜேசேகர, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )