அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று (02) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களில் ஒருவரே சட்டத்தரணி மூலம் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அன்றைய தினம் கட்டாயம் மன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )