ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ; சுரேஷ் சலே கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ; சுரேஷ் சலே கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிறப்பித்த உத்தரவின்படி, விசாரணையின் இறுதி நாளில் சந்தேக நபராகக் குறிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், அவரை மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

அவரை சந்தேக நபராக பெயரிட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )