அமெரிக்க -ஈரான் போரை நிறுத்துவதற்கான அமைதி உடன்படிக்கை                                    பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் இரவு முழுவதும் கலந்துரையாடல்

அமெரிக்க -ஈரான் போரை நிறுத்துவதற்கான அமைதி உடன்படிக்கை பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் இரவு முழுவதும் கலந்துரையாடல்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பாகிஸ்தானால் தயாரிக்கப்பட்ட இந்தத் புரிந்துணர்வு ஒப்பந்தம் , கடந்த இரவு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் பரிமாற்றப்பட்டதாகவும் இந்த திட்டம் இரண்டு நிலைகளைக் கொண்ட அணுகுமுறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனவும் அடுத்த 15–20 நாட்களில் நிரந்தரத் தீர்வுக்கான இறுதி உடன்படிக்கை எட்டப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையில் ஒரே ஒரு தகவல் தொடர்பாடலாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மின்னணு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர்,

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), விசேட தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருடன் இரவு முழுவதும் இந்த விடயம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தவிர துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து மீண்டும் தாக்குதல் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர போர்நிறுத்தத்தை ஈரான் கோருவதாகவும் மேலும் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டாது என்ற உறுதிமொழிக்கு ஈடாக, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

அமெரிக்க அதிபர் ஜனாதிபதிட்ரம்ப் இந்தப் போரை விரைவாக முடிக்க அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஈரான் இதுவரை இந்தத் திட்டத்திற்கு உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கிய வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணை பிரச்சினை மற்றும் எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த இராஜதந்திர நகர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதே வேளை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிடம் அனுமதி பெற்ற பின்னர் மொத்தம் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுள்ளதாக ஈரானிய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை ஊடான தற்போதைய கப்பல் போக்குவரத்து, போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

பாரசீக வளைகுடாவில் ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை ஈரான் இராணுவம் பூர்த்தி செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )