மதுபானசாலைகளுக்கு பூட்டு!

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என சுங்கவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.ஜி. குணசிறி அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் கரோக்கி பார்கள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற இடங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

இந்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான புகார்களை 1913 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )