
புவக்கஹாவெலில் எரிபொருள் பௌசர் விபத்து
சுமார் 33,000 லீட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் வெளியேறிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் வாளி, கேன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி எரிபொருளை எடுத்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணங்களைப் பற்றிய மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

