இரண்டாவது நாளாக தொடரும் அரச மருத்துவர்களின் போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் அரச மருத்துவர்களின் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

உள்மருத்துவப் பயிற்சிக்குப் பின் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பாக தங்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை சுகாதார அமைச்சு மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 08 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.

இப்போராட்டம் காரணமாக மருத்துவமனைகளின் வழமையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காக வந்த நோயாளிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நியமனப் பட்டியல் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சம்பந்தப்பட்ட நியமனங்கள் குறித்து மருத்துவ சங்கத்துடன் கலந்துரையாட சுகாதார அமைச்சர் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )