ஈரானுடன் நடத்திய நீண்ட நேரப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை – அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி

ஈரானுடன் நடத்திய நீண்ட நேரப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை – அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி

அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரானுடன் நடத்திய நீண்ட நேரப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கைவிட ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்று வான்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்கப் பேச்சுவார்த்தைக் குழு தனது இறுதி மற்றும் சிறந்த சலுகையை (Final and best offer) வழங்கியதாகவும், ஆனால் ஈரான் அந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானிய அரசு ஊடகமான தஸ்நிம் செய்திகளின்படி,

அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகள் காரணமாகவே ஒரு பொதுவான உடன்பாடு எட்டப்படுவது தடுக்க்கப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் தொடருமா என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இது மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் சம்மதிக்காததால், உலகளாவிய எரிசக்தி விநியோகத் தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார்:

தற்போது, இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்களா இல்லையா என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் அலட்சியமாகத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )