
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேலும் போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ” போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

