
மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தது
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை (Furnace Oil) ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூரு நெத்திகுமாரகே தெரிவித்தார்.
நேற்று (13) பிற்பகல் இக்கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

