அதி வணக்கத்திற்குரிய பொப் லியோவின் கருத்தை கடுமையாக விமர்சித்த டிரம்ப்- தன்னை இயேசுவுக்கு நிகராகச் சித்தரித்தார்

அதி வணக்கத்திற்குரிய பொப் லியோவின் கருத்தை கடுமையாக விமர்சித்த டிரம்ப்- தன்னை இயேசுவுக்கு நிகராகச் சித்தரித்தார்

யுத்தம் தொடர்பாக திருத்தந்தை வெளியிட்ட கருத்து ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திருத்தந்தை குற்றச் செயல்களை விரும்புபவர் என அமெரிக்க ஜனாதிபதி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அணு ஆயுதங்களை தயாரிப்பது சரியெனக் கூறும், அதேபோல் நகரங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைப் பொருட்படுத்தக் கூடாது எனக் கூறும் ஒரு திருத்தந்தையைத் தமக்கு பிடிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தான் திருத்தந்தையின் ரசிகர் அல்ல எனவும், அவர் ஒரு தாராளவாத கொள்கையுடையவர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருத்தந்தையை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தற்போது உலகெங்கிலும் உள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

அந்தப் புகைப்படம் மூலம் அமெரிக்க ஜனாதிபதி தன்னை இயேசு கிறிஸ்துவாக அர்த்தப்படுத்தியுள்ளதோடு, தான் உலக அமைதிக்காகவும் மக்களுக்காகவும் உதவும் உண்மையான இயேசு என்பதையும் பிரதிபலித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )