மாற்றியமைக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை

மாற்றியமைக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட அல்லது போலியான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கிய அதிகாரப்பூர்வ இலக்கத் தகடுகளுக்குப் பதிலாக, சில வாகனங்கள் மாற்றியமைக்கப்பட்ட தகடுகளுடன் இயங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்குத் தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி சில குழுக்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் சில உரிமையாளர்கள் வெவ்வேறு நிறங்களிலான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார். அத்துடன், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகத் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )