
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கரந்தெனிய ராஜு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இலங்கையில் பல குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த ‘கரந்தெனிய ராஜு’ என்பவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினர் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த ‘கரந்தெனிய ராஜு’ என்றழைக்கப்படும் பாதாள உலகக் குற்றவாளி,நேற்றிரவு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
கொலைச் சம்பவங்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
: இவர் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

