இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – ஈரான்                               அமைதி ஒப்பந்தம் நல்ல வழியிலோ கடினமான வழியிலோ நடந்தே தீரும் – டிரம்ப்

இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – ஈரான் அமைதி ஒப்பந்தம் நல்ல வழியிலோ கடினமான வழியிலோ நடந்தே தீரும் – டிரம்ப்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாக ஈரானின் தலைமை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் புதன்கிழமையுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைய உள்ளதால், மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈரான் போர்நிறுத்த விதிமுறைகளை கடுமையாக மீறிவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி ஒப்பந்தம் நல்ல வழியிலோ அல்லது கடினமான வழியிலோ நடந்தே தீரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா தனது அதிகபட்சக் கோரிக்கைகளை கைவிட மறுப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்சாதே சாடியுள்ளார்.

மேலும், அடுத்தகட்ட நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் திகதி எதுவும் குறிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஈரானின் இந்தத் தீர்மானமான முடிவுகளால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – லெபனான் பதற்றம்: போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவில் விதித்ததைப் போலவே இங்கும் ஒரு மஞ்சள் கோடு கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )