
மலேஷிய கிராமத்தில் பாரிய தீ விபத்து – 200 வீடுகள் சேதம்
மலேசியாவின் சபா மாநிலத்திலுள்ள ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 01:32 அளவில் தீ பரவத் தொடங்கியது.
அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தீ மிக வேகமாகப் பரவி 200-க்கும் மேற்பட்ட வீடுகளைச் முற்றிலுமாக செய்தமாக்கியது..
குடியுரிமை இல்லாதவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உட்பட நாட்டின் மிகவும் ஏழ்மையான சமூகத்தினர் இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் தங்களது உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கவும், அவர்களைத் தற்காலிகமாக மீள்குடியேற்றம் செய்யவும் மத்திய அரசு சபா மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

