ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்கக் கடற்படையின் வசம்

ஈரான் கொடியுடன் கூடிய கப்பல் அமெரிக்கக் கடற்படையின் வசம்

ஈரான் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக தனது Truth Social கணக்கில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த கப்பலை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காத காரணத்தால் அமெரிக்கக் கடற்படை அந்த கப்பலைக் கைப்பற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டூஸ்கா (TOUSKA) என்ற சுமார் 900 அடி நீளம் கொண்ட இந்த கப்பல்
அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதால் இக்கப்பல் கைப்பற்றப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கப்பலை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து பயணித்ததால், கப்பலின் இயந்திர அறை மீது தாக்குதல் நடத்தி அது நிறுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதியின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் ஈரானியத் துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அமெரிக்கக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஈரான் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன், இது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என்றும், இது ஒரு ஆயுதமேந்திய கடற்கொள்ளை என்றும் வர்ணித்துள்ளது.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்நாட்டின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான கதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து தெரிவித்துள்ளார்:

“அமெரிக்கா போர்நிறுத்தத்தை மீறி ஓமான் கடற்பரப்பில் ஈரானின் வர்த்தகக் கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து வழியை முடக்கியுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளைச் செயலுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் மிக விரைவில் பதிலடி கொடுக்கும்.”என ஈரான்
அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )