ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு – கொத்தட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்தட்டுவ பொலிஸாராருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்தட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )