ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்கள் பதிவுத் துறையின் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் இன்றிலிருந்து வழமையான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, கடந்த 17ஆம் திகதி முதல் துறையின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )