
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டும் ; சீனா ஜனாதிபதி வலியுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் வழக்கமான போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானுட நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் சீரான முறையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று Xinhua News Agency செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதல்களுக்கு உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தம் அவசியம் எனவும், அனைத்து பிரச்சினைகளும் அரசியல் மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் Strait of Hormuz பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

