
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை – ஈரானிடமிருந்து பலத்த எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுப்பதன் மூலமும், போர்நிறுத்தத்தை மீறுவதன் மூலமும் தனது இராஜதந்திர நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ பதிவொன்றினூடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், அழுத்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயாரில்லை என சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
வொஷிங்டன் பேச்சுவார்த்தை மேசையை ஒரு சரணடையும் மேசையாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பதற்றநிலை மேலும் அதிகரித்தால், போர்க்களத்தில் புதிய வியூகங்களை வெளிப்படுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

