
அரசாங்கம் கூறும் பொய்களுக்கு எதிராக கோரிக்கைப் பத்திரம் அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை
இப்போதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும்.
நமது நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிர்கள், சொத்துக்கள், மதத்தலங்கள் அழிந்துபோனன. 2019 முதல் இதற்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட முக்கிய சதிகாரர்கள், பிரதான சூத்திரதாரிகள் யாரென்று அறிந்து கொள்ள நாடே காத்துக்கொண்டிருக்கின்றது.
இதன் உண்மை என்ன என்று வெளிக்கொணர அரசியல் தலையீடின்றி வெளிப்படையான நீதியான விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.
இதற்காக சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்று விசாரணையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு விசாரணையை அரசியல்மயமாக்க வேண்டாம்.
தனிநபர்கள், குழுக்கள், பல்வேறு சமூகங்களை மையமாக வைத்துக் கொண்டு இந்த விசாரணைப் பயணத்தை முன்னெடுக்க முடியாது.
உண்மை தேடும் இந்த பயணத்தில் இருந்து அரசியலை விலக்கி, சரியான உண்மைகள் என்னென்ன என்று அறிந்துகொள்வதும் அதனைக் கண்டுபிடிப்பதும் இதில் நடக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி உண்மைக்காகவும் சரியான தகவல்களுக்காகவும் என்றுமே முன்நிற்கும்.
எந்த சந்தர்ப்பத்திலும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை அரசியல்மயமாக்க இடமளிக்க மாட்டோம். ஆகவே, சர்வதேச அமைப்புகளை இணைத்துக் கொண்டு வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலருக்கும் அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறே, இதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகவும் அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
திஸ்ஸமகாராம உடுவில கங்காராம ராஜமகா விகாரை மற்றும பஞ்ஞமகாராம ராஜமகா விகாரைகளுக்கு (21) விஜயம் செய்து சங்கைக்குரிய மகா சங்கத்தினரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் முற்றிலும் பொய்களை கூறும் அரசாங்கமாக காணப்படுவதோடு மக்களை வெளிப்படையாகவே ஏமாற்றி வருகின்றது.
பெரும் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த நீதியை நிலைநாட்டவில்லை.
இந்நேரத்தில் பொய்யான அரசியலை விட்டு விலகி மக்களுடன் செய்துகொண்ட சமூக ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“டித்வா” சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 இலட்சம், 100 இலட்சம் ரூபா அளவில் இழப்பீடுகளைப் பெற்றுத் தருவோம் என்று கூறியும், தகரம் கழன்று சென்றாலும் அதற்கும் குறைந்த பட்சம் 10 இலட்சம் ரூபாக்களைப் பெற்றுத் தருவோம் என்றும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
ஆனால் அதில் எதுவும் கூறிய பிரகாரம் நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்போம் என்றனர். ஆனால் தற்போது மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் முன்வைத்தனர்.
இதுவரையில் அதுவும் நடந்தபாடில்லை. உலகில் கடும் பொருளாதார பிரச்சினை நிலவும் இந்த வேளையில், பல நாடுகள் எரிபொருளுக்கான வரிகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளன.
ஆனால் இந்த அரசாங்கம் வரிக்கு மேல் வரிகளை விதித்து எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த எரிபொருளை மக்களுக்கு மேலும் அதிக விலையில் விற்று வரும் வேலையை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது என்று எதிரக்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குடிமக்கள் மீது வரிச்சுமைகளைச் சுமத்துவது இந்த அரசாங்கத்தின் வாக்குறுதியாக அமைந்து காணப்படவில்லை.
குடிமக்கள் மீது வரிச்சுமை சுமத்துவது இந்த அரசாங்கத்தின் வாக்குறுதியாக அமைந்து காணப்படவில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவோம் என்று ஆளும் தரப்பினர் வீராப்போடு பிரஸ்தாபித்தனர்.
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைகளைக் கூட்ட மாட்டோம் என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த பின்னர், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து பெரும் மோசடியைச் செய்துள்ளனர்.
இதன் காரணமாக போதுமான மட்டத்தில் மின்சார உற்பத்தியை சரியான முறையில் செய்ய முடியாமல் போயுள்ளன. இதன் சுமையை மக்கள் மீது சுமத்தி மக்கள் விரோத அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருந்து வருகின்றது.
இந்த பொய்வாதங்களுக்கு எதிராக 220 இலட்சம் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோரிக்கைப் பத்திரம் அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் மற்றும் ஜனநாயகத்தை ஒடுக்குமுறைக்கு இடமளிக்க முடியாது.
தற்சமயம் நாட்டு மக்களையும் நிறுவனங்களையும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களை ஒடுக்குமுறைக்குட்படுத்தி, ஜனநாயக வெளிக்கு காணப்படும் சந்தர்ப்பங்களை சுறுக்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு நாம் அஞ்சமாட்டோம்.
சுதந்திர ஊடகங்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்றும் முன்நிற்கும். ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் சந்தர்ப்பங்களில் அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அடக்குமுறைக்குட்படுத்தும் முயற்சிகளும் தற்சமயம் அரங்கேரி வருகின்றன.
நாட்டிற்கு சுதந்திர ஊடகமும் ஜனநாயகமும் அவசியமாகும். சுதந்திர ஊடகங்களே ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
முடியுமானால் மாகாண சபை தேர்தல் நடத்துங்கள்.
நாட்டில் 220 இலட்சம் குடிமக்களும் அரசாங்கத்திற்கு எதிராக கோரிக்கைப் பத்திரங்களை அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்ட காரணத்தால் இந்த பொய்யான அரசாங்கத்தை தோற்கடிக்க மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.
மக்களின் ஜனநாயக உரிமையை நடைமுறைப்படுத்த மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
அவ்வாறு நடத்தும் பட்சத்தில் மக்களின் எதிர்ப்பை இந்த பொய்யான அரசாங்கத்தால் நேரில் கண்டுகொள்ள முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

