
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜெயசேகர ( ‘சோக்க மல்லி’) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

