மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026”                                         விண்ணப்ப முடிவுத் திகதி                                        2026 மே 15 ஆம் திகதி வரை நீடிப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” விண்ணப்ப முடிவுத் திகதி 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் மூன்று பிரதான துறைகளின் கீழ் வழங்கப்படுகின்றன,

  1. தொழிற்சாலைத் துறை
    இது ‘பெரிய அளவிலானவை’ மற்றும் ‘சிறிய மற்றும் நடுத்தர அளவிலானவை’ என இரண்டு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலானவை – கழிவு மேலாண்மை, இரசாயனத் தொழில்கள், வாகன சேவை மையங்கள், உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி, ஹோட்டல்கள், ஆடை உற்பத்தி, மருந்து உற்பத்தி, வைத்தியசாலைகள் உள்ளிட்ட 16 துறைகள் இதில் அடங்கும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலானவை – வைத்தியசாலைகள் மற்றும் அச்சிடல் துறைகளைத் தவிர ஏனைய 14 பிரிவுகள் இதில் அடங்கும்.

  1. திட்டத் துறை
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளான ,

சிறிய நீர்மின் நிலையங்கள்

சூரிய சக்தி (தரைவழி நிறுவல்கள் மட்டும்).

காற்றாலை மின் திட்டங்கள்.

  1. நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகத் துறை –
    இதில் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கழிவு மேலாண்மையில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸ் சுற்றாடல் பிரிவுகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற 8 பிரிவுகள் அடங்கும்.

ஊடகப் பிரிவு -வெகுஜன ஊடகம் மற்றும் சமூக ஊடகம் (Facebook பக்கங்கள், YouTube சேனல்கள் உட்பட) என பிரிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் மற்றும் மதிப்பீடு
விருது வகைகள்: தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தகுதி விருதுகள் வழங்கப்படும்.

சிறப்பம்சம் – இந்த விருதுகளுக்கான கோப்பைகள் (Trophies) மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.

மதிப்பீடு – நிபுணர் குழுக்களால் மதிப்பீடுகள் நடத்தப்படும், அவர்களின் முடிவே இறுதியானது.

இறுதித் திகதி: மே 15, 2026.

விருது வழங்கும் விழா – 2026 அக்டோபர் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

கருப்பொருள் – செழிப்பான தேசம், அழகான வாழ்க்கை

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )