
பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (24) நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை சந்திக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குரு ணல் பாண்ட்யா, ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், சுயாஷ் ஷர்மா, ஹேசில்வுட்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங் டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷித் கான், கசிசோ ரபடா, அசோக் ஷர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

