
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் சாத்தியமா ? டிரம்ப் வெளியிட்ட கருத்து
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில்,
ஈரான் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என்றும், ஆனால் அந்த முன்மொழிவின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்றும்,
அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒப்பந்தத்தை நோக்கி ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

