பாகிஸ்தான் இராணுவத் தலைவருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத் தலைவருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்பு

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசீம் முனீருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி,பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி பீல்ட்மார்ஷல் அசீம் முனீருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி
பாகிஸ்தான் சந்திப்புகளைத் தொடர்ந்து, ஓமான் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பயணங்களின் நோக்கம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும், பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டாளி நாடுகளுடன் ஆலோசிப்பதும் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )