ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : கெப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : கெப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்று இடம்பெறவுள்ள 35ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டி, இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி

மறுபுறம், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.

எனவே, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் இன்று விளையாடுவது அந்த அணிக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் தனது தோல்வியில் இருந்து மீண்டு வருமா அல்லது பஞ்சாப் கிங்ஸ் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )