இன்டர்போல் மாநாட்டில் முதன் முறையாக உரையாற்றும் இலங்கை பொலிஸ் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  இன்று பிரான்ஸ் பயணம்

இன்டர்போல் மாநாட்டில் முதன் முறையாக உரையாற்றும் இலங்கை பொலிஸ் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று பிரான்ஸ் பயணம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சட்டத்தரணியுமான பெட்ரிக் வூட்லர் இன்று) காலை பிரான்ஸ் நோக்கிப் பயணமாகவுள்ளார்.

பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் சர்வதேச பொலிஸாரினால் நடத்தப்படும் முதலாவது “பொதுசனத் தொடர்பாடலுக்கான உலகளாவிய மாநாட்டில்” (Global Conference on Public Communication) கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார்.

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக இலங்கை பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது குறித்து அவர் அங்கு சிறப்பு உரை நிகழ்த்தவுள்ளார்.

சர்வதேச பொலிஸ் மாநாடொன்றில் இவ்வாறானதொரு சிறப்பு உரையை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்ட இலங்கை பொலிஸின் முதலாவது ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பெட்ரிக் வூட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )