2.5 மில்லியன் டொலர் குற்றச்சாட்டு ; நிதி அமைச்சுக்கு முன் போராட்டம்

2.5 மில்லியன் டொலர் குற்றச்சாட்டு ; நிதி அமைச்சுக்கு முன் போராட்டம்

இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் அமைப்புகள் இன்று (27) கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இதனடிப்படையில், ‘சர்வஜன அதிகாரம்’ அமைப்பு இன்று முற்பகல் நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதே விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டது.

மேலும், ‘அரகலயவின் பிரஜைகள்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போராட்டமும் மத்திய வங்கி முன்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )