
கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கு ; வழக்கறிஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர், கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
தமரா குமாரி அபேயரத்ன என்ற வழக்கறிஞர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரின் விளக்கமறியல் உத்தரவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
CATEGORIES Sri Lanka

