
ஆசிய கடற்கரை விளையாட்டில் நிபுணி வாசனாவுக்கு தங்கப் பதக்கம்
சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹ்-ஐ எதிர்கொண்ட நிபுணி வாசனா, 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்த வெற்றி, சர்வதேச அரங்கில் இலங்கை மற்போர் விளையாட்டுக்கு பெருமை சேர்க்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

