
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன மாற்றத்திற்கான குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதால் எரான் விக்கிரமரத்ன SJB யிலிருந்து விலகினார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின்செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு ஆகியவற்றிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தே எரான் விக்கிரமரத்ன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
விளையாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால், கட்சிப் பதவிகளிலிருந்து அவர் இவ்வாறு விலகியுள்ளார்.

