கன மழை மற்றும் காற்றினால் 141 வீடுகள் பகுதியளவு சேதம்

கன மழை மற்றும் காற்றினால் 141 வீடுகள் பகுதியளவு சேதம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10ஆம் திகதி முதல் இன்று (16) வரை 141 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகப் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுர மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

பகுதியளவு சேதமடைந்த வீடுகளில், அதிகபட்சமாக 78 வீடுகள் களுத்துறை மாவட்டத்தில் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுர மாவட்டத்தில் 12 வீடுகளும், காலி மாவட்டத்தில் 6 வீடுகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீடுகளும், மொனராகலை மாவட்டத்தில் 4 வீடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 3 வீடுகளும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தலா 2 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,099 என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

48 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )