நாட்டின் சில மாவட்டங்களுக்கு நாளை மாலை 6:00 மணிவரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களுக்கு நாளை மாலை 6:00 மணிவரை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

தற்போது நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு அபாய எச்சரிக்கைகளைவிடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (மே 22) முற்பகல் 6.00 மணி முதல் நாளை (மே 23) பிற்பகல் 6.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை பின்வருமாறு :

3ஆம் கட்ட சிவப்பு எச்சரிக்கை:

கேகாலை மாவட்டம்: தெஹியோவிற்ற (Dehiowita)

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி (Ratnapura) பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

2ஆம் கட்ட எச்சரிக்கை:(அவதானமாக இருக்கவும்)

பின்வரும் பிரதேசங்களில் வாழும் மக்கள் நிலச்சரிவு அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க (Seethawaka), பாதுக்க (Padukka)

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல (Attanagalla)

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய (Ingiriya), புலத்சிங்கள (Bulathsinhala)

கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல (Ruwanwella)

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுள்ள (Pelmadulla), குருவிட்ட (Kuruwita), அயகம (Ayagama)

1ஆம் கட்ட :(விழிப்புடன் இருக்கவும்)
பின்வரும் பிரதேசங்களில் நிலச்சரிவு சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்:

கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை (Yatiyantota)

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ (Ambagamuwa)

இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட (Eheliyagoda), நிவித்திகல (Nivitigala), கலவானை (Kalawana)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )