நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA  அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA அறிவிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நேற்று (11) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )