சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா நோய் பரவல் சமீபத்திய நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் சிக்குன்குனியா என சந்தேகத்திற்கிடமான 190 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 65 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக மருத்து நிபுணர் குமுது வீரகோன் தெரிவித்தார்.

2-3 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய மூட்டு வலி மற்றும் அன்றாட செயற்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்துவது டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்ப்பரவலை குறைக்க உதவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )