
தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு தினமும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.




